தேசத்தின் அழிவை தடுத்து நிறுத்தவே
தேவ சபையை தேவன் சுத்திகரிக்கிறார்
தேவையை புரிந்த ஒரு திரள் கூட்டம்
தேடுவோம் பரிசுத்த தேவனின் கிருபையையே
பொல்லாங்கன் விரித்த வலைகளையே புரிந்த
பொறுப்புள்ளோர் எழும்பிடணும் இப்போ
பொறுமை காத்து புறப்படணும் போருக்கு
பொருட்படுத்தாமலே கல்லெறிதலையும்
பதுங்கி நின்ற பினெகாஸ் எழும்பிடணும்
பக்திவைராக்கியம் காண்பித்திடவே
படுகுழிக்குள் வீழ்ந்தோரைக் காத்திடவே
பயப்படாமல் செயல்புரிந்திடவே
கண்களில் கண்ணீர் கையில் சவுக்கு
கர்த்தரும் எழும்பிட்டார் சுத்திகரிக்கவே
காத்திருக்கும் கர்த்தருடையோர் அனைவரும்
களித்திடுவார் பரிசுத்தம் கண்டே
புவி எங்கும் கர்த்தரின் மகிமை
புகழ் ஓங்கிடுமே தடை இல்லாமல்
புல்லரும் ஓய்ந்தார் போரும் இல்லை
புகலிடம் நமக்கு நல்லவர் இயேசுவே
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோதரர் D. அகஸ்டின் ஜெபக்குமார்.
மேற்கோள் :
ஜெம்ஸ் சத்தம் - மாத இதழ் , jan 2020,பக்கம் : 8 - 9.
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்